ஜோஸ் பட்லருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் : தலைமை பயிற்சியாளர் சில்வர்வுட் பேட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவும் விக்கெட்  கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ளனர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார். சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.

ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், 2-வது இன்னிங்சில் 9 ரன்களும் அடித்தார். இவர் கடைசியாக 12 டெஸ்ட் இன்னிங்சில் படலர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மேலும் 42 டெஸ்ட் போட்டிகளில் 31.46 சராசரியே வைத்துள்ளார். இதனால் பட்லருக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டுமா? என விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்நிலையில் பட்லருக்கு தொடர்ந்து வாய்ப்புகள்  வழங்கப்படும் என்று இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சில்வர்வுட் கூறுகையில் ‘‘அவர் மீது இன்னும் நெருக்கடியை சுமத்தவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க விரும்புகிறோம்.

போட்டிக்கான பயிற்சி, போட்டி மற்றும் எல்லாவற்றிலும் சிறப்பாகவே காணப்பட்டார். முதல் இன்னிங்சிலும் நல்ல நிலையில்தான் இருந்தார். அவர் நம்பிக்கையுடன் இருப்பதை எங்களால் உறுதி செய்து கொள்ள முடிகிறது. உண்மையிலேயே வெற்றிபெற அவருக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும். மற்றவை எல்லாம், அவருக்கு ஒரு சிறந்த நாள் அமைந்து, அதிக ரன்கள் அடித்து. அதில் இருந்து அவர் செல்ல வேண்டும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *