இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும் : மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆலோசனை

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ரசிகர்கள் அனுமதி இல்லாமல் விளையாட்டு போட்டிகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், கடந்த 4 மாதங்களாக இந்திய முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு வீரர்கள் பயிற்சியை தொடங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?. விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச விளையாட்டு அமைச்சர்களுடன், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வீடியோ கான்பரன்ஸ் மூலம் 2 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்.

இதில் முதல் நாளான நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் உள்பட 18 மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘

கொரோனாவினால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பில் இருந்து விளையாட்டை மீட்டு நல்ல நிலைக்கு மேம்படுத்த சரியான செயல்திட்டம் இந்த ஆலோசனை கூட்டம் முடிவில் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு மாநிலமும் ஒன்று அல்லது இரண்டு விளையாட்டை தத்தெடுத்து அதனை முன்னேற்ற எடுக்கும் முயற்சிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் போதிய நிதியுதவி அளிக்கும்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!