ஐசிசி டெஸ்ட் புதிய தரவரிசை பட்டியல் : ஜான்சன் ஹோல்டர் சாதனை முன்னேற்றம்

துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், 2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி,  3-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர்  32 புள்ளிகளை கூடுதலாக பெற்று ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது தரவரிசைபுள்ளி எண்ணிக்கை 862 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தரவசரிசை பட்டியலில் ஜான்சன் ஹோல்டரின் சிறந்த நிலை மட்டுமல்லாது கடந்த 20 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஒருவரின் அதிகபட்ச புள்ளியும் இதுவாகும். இதே டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் மேலும் 46 புள்ளிகள் பெற்று மொத்தம் 726 புள்ளிகளுடன் ஒரு இடம் உயர்ந்து 18-வது இடத்தை பிடித்துள்ளார்.

டாப்-10 பந்து வீச்சாளர்களில் இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே (7-வது இடம்) அங்கம் வகிக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!