கேப்டன் ஜேம்ஸ் குக் தனது மூன்றாவது கடற் பயணத்தை தொடங்கிய நாள்

1576 – ராஜ்மகால் போரில் வங்காள சுல்தானகத்தை வென்றதை அடுத்து, முகலாயப் பேரரசு வங்காளத்தைக் கைப்பற்றி இணைத்தது.

1641 – போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

1691 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் இராணுவம் அயர்லாந்தில் ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது.

1776 – கப்டன் ஜேம்ஸ் குக் தனது மூன்றாவது கடற் பயணத்தை ஆரம்பித்தார்.

1799 – ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் (சீக்கியப் பேரரசு) ஆட்சியைப் பிடித்தார்.

1806 – 16 செருமானிய மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!