கொரோனா பாதிப்பு : ரஷ்யாவில் பலி எண்ணிக்கை 11335 ஆக அதிகரிப்பு

மாஸ்கோ,

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  தொடர்ந்து பிரேசில் 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில், 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதில் , கடந்த 24 மணிநேரத்தில் 130 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக உயர்ந்து உள்ளது.  6,615 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், பாதிப்பு எண்ணிக்கையானது 7 லட்சத்து 27 ஆயிரத்து 162 ஆக உயர்ந்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!