வாள்வெட்டு சம்பவத்தில் நேற்று இரவு கைதான ஐந்து நபர்கள்

இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரின் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாகத்தில் வைத்து சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள்கள் இரண்டு, கைக்கோடரி ஒன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன. மல்லாகம் கனி கும்பலைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தவரும் முன்னர் அந்தக் குழுவில் இருந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!