41 வயதில் ஐபிஎல் டி20 தொடரில் அறிமுகமான பிரவீன் தாம்பே. மும்பை கிரிக்கெட் அணிக்காக முதல்-தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர். மேலும் 41 வயதில் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய அவர், அதிக வயதில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடுவதற்கான வீரர்கள் ஏலத்தில் பங்குபெற விண்ணப்பம் செய்திருந்த அவரை, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவராக ஷாருக் கான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.