கிரிக்கெட் வரலாற்றில் 3வது முறையாக அதிக நாட்கள் தடை செய்யப்பட்ட நிகழ்வு

முதல் உலகப்போர் மற்றும் ஸ்பேனிஸ் புளூ காரணமாக 1914 மார்ச் 3-ம்தேதி முதல் 1920 டிசம்பர் 16 வரை 2411 நாட்கள் போட்டி நடைபெறவில்லை. இதனையடுத்து இரண்டாம் உலகப்போர் காரணமாக 1939 ஆகஸ்ட் 22 முதல் 1946 மார்ச் 28 வரை 2481 நாட்கள் கிரிக்கெட் நடைபெறவில்லை.

தற்போது 3வது முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காரணமாக 117 நாட்கள் கிரிக்கெட் போட்டி நடைபெறாத நிலையில், இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றுகிறது. கடைசியாக கடந்த மார்ச் 13-ம்தேதி ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் போட்டி நடந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆசியன் புளூ (1957-58), ஆங்காங் புளூ (1968-69), இந்தியா- பாகிஸ்தான் போர் (1965 மற்றும் 1971), வளைகுடா போர் (1990,1991) லண்டன் குண்டுவெடிப்பு (2005), மும்பை தாக்குதல் (2008), லாகூரில் இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் (2009) உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது. அப்போது அந்தந்த நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா நோய் தொற்றால் மட்டுமே உலகம் முழுவதும் போட்டிகள் நடைபெறவில்லை. தற்போது 117  நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *