கரூர்:
கரூர் வாங்கல் காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் வாங்கல் போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குப்புச்சிபாளையம், மேலசக்கரபாளையம், எல்லைமேடு பிரிவு, முனியப்பனூர் ஆகிய பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ், திருச்சி காட்டுப்புத்தூர் சங்கரிநகர் பகுதியை சேர்ந்த சிவா, நாமக்கல் மாவட்டம், ராசிபாளையம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம், பாலப்பட்டி பகுதியை சேர்ந்த குமரேசன், திண்டுக்கல் மாவட்டம், நத்தம், சின்னமலையூர் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.