இலங்கையில் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

இலங்கையில் கொழும்பு , காலிமுகத்திடல் பகுதியில் ரஷ்ய நாட்டு பெண் ஒருவருக்கு தொல்லை கொடுத்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக தனது முகநூலில் இந்த பெண் இதுகுறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தான் தனது 3 நண்பர்களுடன் காலி முகத்திடலில் பயணித்த போது 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று தங்களுக்கு தொல்லை கொடுத்தது. அதிகளவு மதுபானம் அருந்தியிருந்த ஒரு இளைஞன் தன்னை தகாத வார்த்தையில் பேசினார் , அதற்கு எதிராக தலையிட முயன்ற எனது நண்பனுக்கும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் பதிவிட்டிருந்தார். அதையடுத்து இந்த விசயம் கொழும்பு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து சந்தேக நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!