இறுதி கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் சொன்னதாக தற்போது வெளியான தகவல்

இலங்கையில் முள்ளிவாய்க்காலில் இறுதி கட்டத்தில் மக்கள் வெளியேறும் போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் தன்னிடம் கூறிய விசயங்கள் இவைதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ச.கனகரத்தினம் கூறியிருக்கிறார். அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தளபதிகள் இன்று இல்லை ஆனால் அவர்கள் தன்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று, அந்த ஒரு சொல்லுத்தான் எனது அடி மனதில் இப்பொழுதும் நிலைத்து இருக்கின்றது. இந்த உண்மையினை இன்று சொல்கின்றேன் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *