இப்போது லாக்டவுனில் ஆரவாரமின்றி , 10 கிலோ எடையை கடின உடற்பயிற்சியால் குறைத்துள்ளார் நடிகை ஷெரின். தமிழ் சினிமாவில் தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான இவர், பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஷெரினின் குண்டான புகைப்படத்தை பார்த்து கலாய்த்த பலரும் தற்போது, வாயடைத்துப் போய் நிற்கும் அளவுக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார் ஷெரின்.