இந்த ஸ்பெஷல் கூட்டை எப்படி வைப்பது என்று பார்ப்போம்.
இதற்கு தேவைப்படும் பொருட்கள் :
சௌசௌ – 1 ( சிறியது ), சாம்பார் பொடி 1/2 மேஜைக்கரண்டி, கடலை பருப்பு – 50 கிராம், உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவைப்படும் பொருட்கள் :
தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி, தக்காளி 1 ( சிறியது ), சின்ன வெங்காயம் – 5,
தாளிக்க தேவைப்படும் பொருட்கள் –
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி, கடுகு – 1 தேக்கரண்டி, கறிவேப்பில்லை – சிறிது, சின்ன வெங்காயம் – 3
இதனை செய்யும்முறை :
முதலில் வெங்காயம், சௌசௌவை சிறிதாக வெட்டி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் கடலைப்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் சௌசௌவுடன் சிறிது உப்பு மற்றும் காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர் வெந்த கடலைப்பருப்பை அதில் போட்டு சாம்பார் பொடியையும் போட வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். தொடர்ந்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். அதற்கு பிறகு கறிவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து தாளித்து சௌசௌ கூட்டில் சேர்க்கவும். பின்னர் எடுத்து பரிமாறவும் .
