கடந்த 2013ம் ஆண்டு மறைந்த நடிகை மஞ்சுளா விஜயகுமாருக்கு நேற்று பிறந்தநாள். ‘விஜயகுமார் வீட்டின் மிகவும் அழகான மஞ்சும்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று மகள் ப்ரீத்தா ஹரியும், ‘உங்களுடன் கழித்த ஒரு மாதத்தை மறக்க முடியாது அம்மம்மா’ என்று மூத்த பெண் வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமாரும் தங்கள் இன்ஸ்டாவில் பாசத்தையும், இளமைக்காலம் முதலான மஞ்சுளாவின் புகைப்படங்களையும் ஷேர் செய்திருக்கிறார்கள்.
