அதிகம் வரவேற்பை பெற்ற நீயா நானா என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் கோபிநாத் . இந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்து கொண்டு வருகிறார். இவரின் பல மேடைப்பேச்சுக்கள் பல இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இன்றும் விளங்கி வருகிறது. டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோபிநாத், வாமனன், தோனி, நிமிர்ந்து நில் மற்றும் திருநாள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் இன்று தனது 45வது பிறந்தநாளை தனது குடும்பத்தாருடன் இணைந்து விமரிசையாக கொண்டாடி வருகிறார்.
