மனஉளைச்சல் காரணமாக பெண் காவலர் தற்கொலை

திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பெண் காவலர் பவானி, வையம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த இவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் சில மாதங்களில் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்த இவர், சக பெண் காவலர்களிடம் கொடுத்த 4 லட்சம் ரூபாய் கடனும் திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது.

இவைகளால் மன உளைச்சலில் இருந்த அவர், வழக்கு ஒன்றின் தொடர்பாக  சான்றிதழ் வாங்க இருசக்கர வாகனத்திலேயே கோவை சென்றுள்ளார். மன அழுத்தம் அதிகரித்ததால், எலி மருந்தை சாப்பிட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரணிப்போம் என்பதை அறிந்த பவானி, காவல் நிலையை பணியை முடித்துக் கொடுத்திருப்பது, சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *