ஊரடங்கு விதிகளை மீறிய 5 கடைகளுக்கு சீல்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் கடைவீதிகளில் மன்னார்குடி ஆர்.டி.ஓ,புண்ணியகோட்டி தலைமையில் நீடாமங்கலம் தாசில்தார் மதியழகன், போலீசார், பேரூராட்சி அலுவலர்கள் ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.இதில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 5 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Read More

பெருமாநல்லூர் பகுதியில் 1,300 பேருக்கு கொரோனா பரிசோதனை

பெருமாநல்லூர்: கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்கடந்த 3 மாதங்களில் 1,300 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 12 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மரத்தில் கார் மோதி வாலிபர் பலி

வாணாபுரம்: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் மகேஷ் (வயது 34), நாகராஜ் (27). இவர்கள் இருவரும் ஐதராபாத்திற்கு காரில் உறவினரின் வளைகாப்புக்கு நிகழ்ச்சிக்காக சென்றனர். பிறகு அதே காரில் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு புறப்பட்டனர். திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலை அழகானந்தல் பகுதியில் செல்லும்போது நாகராஜின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதியது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வெறையூர் …

Read More

காரில் மணல் மூட்டைகளை கடத்திய வாலிபர் கைது

கூடலூர்: கூடலூர் தெற்கு போலீசார் கூடலூர் குள்ளப்பகவுண்டன்பட்டி ஒத்தகளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் காருக்குள் 13 மூட்டைகள் இருந்தன. போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது மணல் இருந்தது தெரியவந்தது. அனுமதியின்றி முல்லைப்பெரியாற்றில் இருந்து மணல் அள்ளி காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காரில் மணல் கடத்தி வந்த குள்ளப்பகவுண்டன்பட்டி பங்களாமேடு தெருவை சேர்ந்த தட்சிஅழகன் (வயது 29) என்பவரை கைது செய்தனர்.

Read More

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் மோகன்தாஸ் (வயது 20). இவரும், அவருடைய தாய் சமாதானமும் குருவிகுளத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மகேந்திரவாடி அருகில் வந்தபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் மோகன்தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், அய்யாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மோகன்தாஸ் உடலை கைப்பற்றி பிரேத …

Read More

வில்லுக்குறி அருகே பள்ளிக்கூட ஆசிரியை தற்கொலை- போலீசார் விசாரணை

அழகியமண்டபம்: வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண்பால் (வயது 37). இவருடைய மனைவி வனஜாரோஸ் (33). கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. வனஜாரோஸ் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஜாண்பால் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வனஜாரோஸ் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். உடனே ஜாண்பால், எதற்காக வாந்தி எடுக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு, வீட்டில் வைத்திருந்த தென்னை மரத்துக்கு வைக்கப்படும் விஷ …

Read More

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 161 பேர் கைது

வேலூர்: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுஇடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கை மீறி சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஊரடங்கை மீறிய 161 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Read More

திருப்பத்தூர் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தாலுகா ஏரிக்கோடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் தேசிகன் (வயது 7). புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது முட்புதரில் இருந்து வந்த பாம்பை கவனிக்காத தேசிகன் பாம்பை மித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவனது காலில் பாம்பு கடித்துள்ளது. இதில் மயக்கமடைந்த அவனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டான். இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

படத்திற்காக உடல் எடையை குறைத்த விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நடித்த படங்களில் நீண்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடி, அதிக வசூல் செய்த படம், ‘பிச்சைக்காரன்.’ சசி இயக்கிய அந்தப் படம், தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு அங்கும் அதிக வசூல் செய்தது. அதைத் தொடர்ந்து ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விஜய் ஆண்டனியின் பட நிறுவனம் முடிவு செய்தது. இதுபற்றி தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி கூறியதாவது: “பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம், அதே பெயரிலேயே உருவாகிறது. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யாமேனன் அல்லது …

Read More

வடிவேலு அறிமுகமாகும் வெப் தொடரை இயக்கப்போவது இவர்தான்- வெளியான தகவல்

நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பட வேலைகள் கொரோனாவால் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் …

Read More