சீரகம் – தனியா சூப் உடலுக்கு நன்மை தரும்

தேவையான பொருட்கள் :

சீரகம், மல்லி (தனியா) – தலா கால் கப்,

இஞ்சி – சிறிய துண்டு,
மிளகு – 2 டீஸ்பூன்,
எலுமிச்சைப் பழம் – 2,
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

மல்லி (தனியா), சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக ஊறவைக்கவும். இத்துடன், கறிவேப்பிலை, தோல் சீவிய இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, சக்கையை வடிகட்டி எடுத்துவிடவும். பிறகு, தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *