பிரபல ஆராய்ச்சியாளரான மிங் சி கியூ ஆப்பிள் நிறுவனம் 10.8 இன்ச் ஐபேட் மாடலினை இந்த ஆண்டும், 8.5 இன்ச் ஐபேட் மினி மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபேட் மினி ஆப்பிள் ஏ13 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் 10.8 இன்ச் ஐபேட் மாடலில் ஏ10 ஃபியுஷன் சிப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஐபேட் சீரிசில் ஆப்பிள் நிறுவனம் – 12.9 இன்ச் மற்றும் 11 இன்ச் ஐபேட் ப்ரோ, 10.5 இன்ச் ஐபேட் ஏர், 10.2 இன்ச் ஐபேட் மற்றும் 7.9 இன்ச் ஐபேட் மினி என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு 10.8 இன்ச் ஐபேட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இது 10.2 இன்ச் ஐபேட் மாடல் மேம்பட்ட ஸ்கிரீன் பெறுமா அல்லது 10.5 இன்ச் ஐபேட் ஏர் மேம்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.