இலங்கையில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் கடந்த வாரம் மூன்று மலேரியா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என கூறப்படுகின்றது. இதற்கேற்ப இந்த வருடத்தில் இதுவரை 13 பேர் மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அடையாளங் காணப்பட்டுள்ள மலேரியா நோயளர்கள் மூன்று பேரில் ஒருவர் தம்புள்ளை – பெல்வெஹெர தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இரத்தினபுரி பகுதியை சேர்ந்த இந்த நபர், மடகஸ்காரில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *