கிணறு ஆழப்படுத்த இறங்கிய இளைஞர் பலி

இலங்கையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கிணறு ஆழப்படுத்த இறங்கிய இருவரில் அமுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேசன் குடியிருப்பு 1ஆம் வட்டாரத்தில் நேற்று காலை நடைபெற்றதுடன் 24 வயதான ஆறதுர்யன் என்பவரே உயிரிழந்துள்ளார். கடும் வறட்சி காரணமாக நேசன் குடியிருப்பு பகுதி மக்களின் கிணறுகள் வற்றி காணப்படுகின்றன. இந்நிலையில் கிணறுகளை மேலும் ஆழப்படுத்தும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து குடிதண்ணீரினை பெற்றுக்கொள்வதற்காக மேலும் ஆழப்படுத்த முற்பட்ட போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *