சீன பாதுகாப்பு ஆலோசகரின் உரை காரணமாக ஏற்பட்ட பரபரப்பு

சமீப காலமாக இந்திய – சீன படைகளிடையே லடாக் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் எழுந்துள்ள நிலையில் சீன தாக்குதலுக்கு தயாராக வேண்டும் என அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள சீன முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரலும், சீன பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவருமான குயோ லியாங் “நாம் நமது எல்லைகளை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும். பல இடங்களில் இந்தியா நமது படைகளை எல்லையை விட்டு விரட்டி வருகிறது, இந்தியாதான் அத்துமீறுகிறது. நாம் ரோந்து பணிகளை அதிகரித்து கொள்ள வேண்டும். இந்த பிரச்சினை முடியும் முன்னர் இந்தியா எப்போது வேண்டுமானாலும் நம்மை தாக்கலாம், அதற்கு முன்னால் நாம் முந்தி கொள்ள வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *