ஜெயலலிதா வேடத்திற்கு தகுதி இல்லாதவர் கங்கனா ரணாவத் : நடிகை மீரா மிதுன் காட்டம்

தமிழில் 8 தோட்டாக்கள் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நடிகை மீர மிதுன் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண் பிரபலமான இவர், சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறி வருகிறார்.

அந்த வகையில், நடிகை கங்கனா ரணாவத்தை கடுமையாக சாடி உள்ளார். விஜய் இயக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு படமான தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ஆனால் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் தகுதி இல்லாதவர் என்று மீரா மிதுன் கூறியுள்ளார்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில், “சுஷாந்த் சிங் மரணமடைந்த விவகாரத்தில் கங்கனா ரணாவத் தேவை இல்லாமல் கருத்து தெரிவித்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. தமிழ் பட உலகில் இருக்கும் அரசியலால் உங்களை ஜெயலலிதா வேடத்துக்கு தேர்வு செய்து தவறு இழைத்துள்ளனர்.

சகாப்தமாக வாழ்ந்த துணிச்சல் மிகுந்த ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க நீங்கள் சிறிதும் பொருத்தமில்லாதவர்” என்று மீராமிதுன் கூறியுள்ளார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் வாரிசு நடிகர் நடிகைகள் ஆதிக்கத்தை கங்கனா கண்டித்து இருந்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *