தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் : சிபிஐ விசாரணைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

சென்னை,

சாத்தான்குளம் வியாபாரி, மற்றும் அவரது மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்

தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது. சி.பி.ஐ விசாரணையைவிட சிறப்புப் புலனாய்வுக்குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. இருந்தாலும் சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *