போலீசார் தாக்குதலில் இருவர் பலி : இரங்கல் செய்தி வெளியிட்ட நடிகர் சரத்குமார்

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கணேசமூர்த்தி என்பவர் போலீசார் துன்புறுத்தியதாக தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், தென்காசி மாவட்டம் வி.கே.புதூரை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமரேசனை போலீசார் துன்புறுத்தியதாக சம்பந்தப்பட்ட போலீசார் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரேசன் சிகிச்சை பலன் இன்றி கடந்த 27-ந் தேதி உயிரிழந்த சம்பவமும் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்

கணேசமூர்த்தி மற்றும் குமரேசன் இருவரின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இவர்களின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்து இருவரின் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *