சாத்தான்குளம் தந்தை மகன் பலியான விவகாரம் : திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி ட்விட்

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதை சி.சி.டி.வி. காட்சிகள் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் என முதல் அமைச்சருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா?

இரு அப்பாவிகளின் உயிரைப் பறித்த குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள்? பதவியை தவறாகப் பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களைக் காக்க வேண்டிய முதல் அமைச்சர் செயலற்று இருப்பது ஏன்? முதல்-அமைச்சரின் பலவீனம் அதிர்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *