கேரளாவில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கேரளாவில் நேற்று புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 78 பேர் வெளி நாடுகளில் இருந்தும், 26 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 79 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிப்பால் கேரளாவில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக கேரளா முதல்வர் விஜயன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *