கொரோனா வைரஸ் பாதிப்பு : டெல்லியில் பலி எண்ணிக்கை 2680-ஆக உயர்வு

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிப்பு மற்றும் உயிர்பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85,161 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 56 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2680 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்துள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *