நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றும் பிரதமர் மோடி

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டங்களாக இந்த ஊரடங்கு நீடிககப்பட்டதை தொடர்ந்து, கடைசி கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

இந்த தகவலை பிரதமர் அலுவலகம் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கு, லடாக் மோதல் மற்றும் சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு மத்தியில் பிரதமர் உரை நிகழ்த்துவது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *