ஐஸ்லாந்து அதிபர் தேர்தல் : குட்னிங் ஜோகன்னசன் அமோக வெற்றி

ரெய்காவிக்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில்,  ஐஸ்லாந்தில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் குட்னிங் ஜோகன்னசன் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து குட்முண்டூர் பிராங்கிளின் ஜான்சன் போட்டியிட்டார்.

கொரோனா பீதிக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அதிபர் குட்னிங் ஜோகன்னசன் 92.9 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குட்முண்டூர் பிராங்கிளின் ஜான்சனுக்கு வெறும் 7.8 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இந்த அமோக வெற்றி மூலம் குட்னிங் ஜோகன்னசன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐஸ்லாந்தின் அதிபராகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *