உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரான்ஸ் பிரதமர்

பாரீஸ்,

பிரான்சில் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி தேதி முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 22-ந் தேதி 2வது கட்ட தேர்தல் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் நார்மாண்டி பிராந்தியத்திலுள்ள லி ஹவ்ரே நகரில் போட்டியிட்ட அந்த நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப் 58.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் லி ஹவ்ரே நகரின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக அவர் தான் மேயராக தேர்வு செய்யப்பட்டாலும் பிரதமர் பதவியில் தொடருவேன் என ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *