இந்திய இளம் வீரர் நிதின் மேனன் பற்றிய சிறு தகவல்

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) உயர்மட்ட நடுவர் குழுவில் (எலைட் பேனல்) இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் சேர்க்கப்பட்டுள்ளார்.  இதன் மூலம்  ஐ.சி.சி.உயர்மட்ட நடுவர் குழுவில் இடம் பிடித்த 3-வது இந்தியர் நிதின் மேனன் ஆவார்.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நிதின் மேனன் 3 டெஸ்ட், 24 ஒருநாள் மற்றும் 16 இருபது ஓவர் போட்டியில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். 2 ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி இருக்கும் நிதின் மேனன் தனது 22 வயதில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகினார். அடுத்த ஆண்டிலேயே அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடுவராக தேர்வானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *