எல்லோருக்கும் சம உரிமை கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும் : வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜான்சன் ஹோல்டர்

அமெரிக்காவில் கறுப்பின வாலிபர் போலீசார் விசாரணையில் கொடுராமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வெறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்தது. தற்போது வரை அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்கள் கறுப்பு அனத்தவருக்கு ஆதரவாக விழிப்புணர்வு லோகோ பதிந்த டிசர்ட் அணிந்து விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் விடுத்துள்ள அறிக்கையில், ‘கருப்பு இனத்தவருக்கு ஆதரவாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஒற்றுமையாக இருந்து உதவி செய்வது நமது கடமையாகும். விளையாட்டு வரலாற்றில் கிரிக்கெட்டுக்கும், வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கும் இது முக்கியமான தருணமாகும்.

டெஸ்ட் தொடரை வென்று விஸ்டன் கோப்பையை தக்க வைக்கவே நாங்கள் இங்கிலாந்துக்கு வந்து இருக்கிறோம். அதேநேரத்தில் உலகில் என்ன நடக்கிறது என்பது பற்றியும், சமநீதி, சமத்துவத்துக்கான போராட்டம் குறித்தும் நன்கு உணர்ந்து இருக்கிறோம். வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட்டின் வளமான வரலாற்றை இளம் வீரர்களாக நாங்கள் அறிந்து இருக்கிறோம்.

இந்த விளையாட்டின் அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாவலர் என்பதையும் உணர்ந்து உள்ளோம். நிறத்தை வைத்து மக்களை தீர்மானிக்கும் எண்ணம் எல்லை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. நிறத்தின் அடிப்படையிலும், அதன் பின்னணி அடிப்படையிலும் வேறுபாடு காட்டப்படாமல் எல்லோருக்கும் சமஉரிமை கிடைப்பதற்கான வழிமுறையை நாம் கண்டறிய வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *