பார்சிலோனா அணியை கவனித்து வருகிறோம் : ரியல் மாட்ரிட் வீரர் கரிம் பென்ஜிமா

மாட்ரிட்,

ஸ்பெயினில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டி தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறன. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள எஸ்பன்யோல் கிளப்பை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்,  ரியல் மாட்ரிட் அணி அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஸ்பன்யோல் அணியை வீழ்த்தியது. கொரோனா பாதிப்பு காரணமாக போட்டியில் ஏற்பட்ட இடைவெளிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றி இதுவாகும்.

இந்த  வெற்றிக்கு பிறகு கருத்து தெரிவித்த ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கரிம் பென்ஜிமா கூறுகையில், ‘இது மிகவும் முக்கியமான வெற்றியாகும். பார்சிலோனா அணியை நாங்கள் கண்டுகொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. அவர்களது செயல்பாடுகளை நாங்கள் கவனித்து வருகிறோம். இருப்பினும் நாங்கள் எங்களது ஆட்டத்தில் தான் அதிக கவனம் செலுத்துகிறோம். இனிவரும் ஒவ்வொரு ஆட்டமும் இறுதிப்போட்டி போன்றதாகும்‘ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *