கொரோனா வைரஸ் பாதிப்பு : மராட்டியத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீடிப்பு

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மராட்டியத்தில ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்கு இதுவரை இல்லாத அளவில் நேற்று 5 ஆயிரத்து 493 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 3-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் நேற்று மேலும் 156 பேர் உயிர்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 429 ஆகி உள்ளது. இதற்கிடையே மராட்டியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் உள்ள 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவுக்கு வருகிறது.

இதனால் மாநிலத்தில் 3 மாதத்துக்கு மேலாக இருக்கும் ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்படுமா அல்லது மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.  இந்நிலையில் ஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மராட்டிய மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *