விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 39 பேர் கைது

விருதுநகர்:

ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக நேற்று 39 பேர் கைது செய்யப்பட்டனர். 14 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 10,315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,242 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,812 இருசக்கர வாகனங்கள், 84 கார்கள், 112 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *