ஆலங்குடி அருகே முயல் வேட்டையாடிய 6 பேர் கைது – போலீசார் விசாரணை

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வனப்பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பள்ளத்திவிடுதி வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு 6 பேர் கும்பல் முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அந்த கும்பலை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் வீரமணி (வயது 27), பரமேஸ்வரன் (18), திருமுருகன் (19), உத்தம நாதன் (36), புகழேந்தி (24) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த வலை, சக்திவாய்ந்த பேட்டரிலைட் ஆகியவற்றை கைப்பற்றி திருவரங்குளம் வனச்சரகர் அதிகரிகளிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *