இரத்த குழாயில் அடைப்பை தடுக்கும் தக்காளி

வலுவான எலும்புகளுக்கு தக்காளி உதவுகிறது. வைட்டமின் கே, மற்றும் கால்சியம் எலும்பை திடமாக வைத்து, எலும்புகளில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்கிறது. இதில் லைகோபீன், எலும்பின் பெருண்மையை மேம்படுத்தும். எலும்புப்புரை நோய்களை எதிர்த்து போராடவும் உதவுவது தக்காளி.

ஆண்கள் தக்காளியை அதிகம் சாப்பிட்டு வந்தால் 20 சதவீதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தை குறைக்கலாம். தக்காளியில் வைட்டமின் சி, மற்றும் இரும்பு சத்து சம அளவில் உள்ளதால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால் உடனே பச்சை தக்காளியை வெட்டுப்பட்ட காயத்தில் வைத்தால் ஆன்டி செப்டிக்காக செயல்படும்.

தக்காளி ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கவும் மற்றும் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் கொழுப்பு படிவதை தடுக்கிறது. மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

தக்காளியில் உள்ள லைகோடீன் தான் இதற்கும் துணை புரிகிறது. முக்கியமாக புரோஸ்டேட், கருப்பைவாய் புற்று, வாய்புற்று, தொண்டை புற்று, வயிற்று புற்று, உணவுக்குழாய் புற்று, குடல் புற்று, கருப்பை புற்று போன்ற பல வகையான மிகவும் துன்பத்தை தரக்கூடிய புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்திருக்க தக்காளி உதவுகிறது. குரோமியம் அதிகம் இருப்பதால், இது சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. கண்ணுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்தி மாலை கண் வியாதி வராமல் தடுக்கும், புரை வளர்வதை தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *