இப்போது நீண்ட நேரம் மாஸ்க் அணிந்து அவஸ்த்தையை சந்திக்கிறீர்களா?

தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள பெரிதும் உதவக்கூடியது மாஸ்க் மட்டும் தான். அந்த மாஸ்க்கை முறையாக அணிய வேண்டியது மிகவும் முக்கியம் . அதே போல் தான், நாம் உபயோகிக்கும் மாஸ்க்கை தேர்ந்தெடுப்பதும் அவசியமான ஒன்று. மிகவும் இறுக்கமான மாஸ்க் பயன்படுத்துவது நம் சருமத்திற்கு கேடு விளைவிக்க நேரும். சரும எரிச்சல், சொரி மற்றும் சிவந்த சருமம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். சாதாரணமாக வெப்பமும் ஈரப்பதமும் தான் விளைவுகளை மோசமாக்குகின்றன. இதுப்போன்ற காரணங்களுக்காக நீங்கள் மாஸ்க் அணிவதை எக்காரணம் கொண்டும் நிறுத்த முடியாது. மாஸ்க் உங்கள் சருமத்தை, அழுக்கு மற்றும் மாசுபாட்டிலிருந்து தடுக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? அது என்னவோ உண்மை தான். ஆயினும் , மாஸ்க் அணியும் போது முகத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையை மறந்துவிடாதீர்கள். ஆகவே , எப்போது மாஸ்க் அணிந்து வெளியே சென்றாலும், வீட்டிற்கு வந்தவுடன், முகத்தை சரியாக சுத்தம் செய்ய மறந்து விடாதீர்கள். அதுமட்டுமின்றி, 2-3 நாட்கள் இடைவெளியில் முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதும் அவசியம் . வெறும் வெந்நீரில் ஆவி பிடிப்பதன் மூலம் சருமத் துளைகளில் கண்ணிற்கு தெரியாமல் படிந்திருக்கும் அழுக்குகள் வெளியேறும். அப்படி பண்ணாவிட்டால், முகப்பரு , கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை தூண்டக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *