பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் பிரபலமுமான சினேகனுக்கு இன்று பிறந்த நாள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் சேரன் இயக்கிய குடும்ப படமான பாண்டவர் பூமி படத்தில் இடம்பெறும் , “தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்” மற்றும் “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்” பாடலையும் எழுதி பிரபலமானவர் சினேகன் . பாடலாசிரியராகவும், நடிகராகவும் வந்து நம் அனைவரின் மனங்களையும் கொள்ளையடித்த சினேகன் பின்னர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அவருக்கு இன்று பிறந்தநாள். ஜூன் 23 ம் தேதியான இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் சினேகன் அவர்களுக்கு அவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *