தென்னிந்திய சினிமா நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று பிறந்ததினம்

தனது கொஞ்சும் சிரிப்பாலும் , கண்ணழகாளும் பல ரசிகர்களை கிரங்க வைத்தவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு வருகிறார் . நடிகை காஜல் அகர்வால் இன்று தனது 34வது பிறந்தநாளை குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார். இவருக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும், இவரது பிறந்த நாளுக்கு காமன் டிபி-ஐ வெளியிட்டும் அதை பகிர்ந்தும் காஜல் அகர்வாலை இந்நாளில் மகிழ்ச்சியாக்கி கொண்டு வருகின்றனர் அவரது அபிமான ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *