தமிழ் சினிமாவில் சமுத்திரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மக்கள் அனைவருக்கும் பரிச்சயமானவர் சிந்து மேனன். முதன்முதலில் கன்னட திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த சிந்துமேனன் பின் படிப்படியாக தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தார். நீணட இடைவெளிக்கு பிறகு ஈரம் படத்தில் ஆதியுடன் இணைந்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரையே பெற்று தந்தது. இந்த அழகான பெங்களூர் கிளி ஜூன் 17ம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதால் இவருக்கு ரசிகர்கள், நண்பர்கள், திரை துறை நண்பர்கள் என பலரும் தங்களது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
