கொரோனா வைரஸ் பாதிப்பு : தமிழகத்தில் ஒரே நாளில் 759 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர்களில் தமிழகத்தில் இருந்து 710 பேருக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 49 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அவர்களில் மராட்டியத்தில் இருந்து 24 பேரும், ராஜஸ்தானில் இருந்து 6 பேரும் தொற்று உறுதியானவர்கள் ஆவர்.  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 9,876 பேர் ஆண்கள், 5,631 பேர் பெண்கள் மற்றும் 5 பேர் திருநங்கைகள் ஆவர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்து உள்ளது.  இன்று 5 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 98ல் இருந்து 103 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *