இலங்கையில் முக்கிய இடத்தில் கைவரிசையை காட்டிய பலே திருடர்கள்

இலங்கையில் திருகோணமலை- கந்தளாய் பிரதேசத்திலுள்ள விகாரையொன்றுக்குள் கூரை மேல் ஏறி உள் நுழைந்து கணினி மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்ளையையடுத்து நேற்று மாலை கந்தளாய், 94 ம் கட்டை – சைலாறாம விகாரையின் விகாராதிபதி அஸ்கிரிய புஞ்யரத்ன தேரர் பதிவு செய்துள்ளார். விகாரையின் கூரை மேல் ஏறி உள்ளே நுழைந்த திருடர்கள் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபா பணத்தையும் மடிகணினி ஒன்றையும் திருடிச் சென்றுள்ளனர் என புகார் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த சொக்கோ பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக இந்த இடத்தைப் பகுப்பாய்வு செய்யும் நோக்கில் அடையாளங்களை போட்டுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *