கேரளாவில் பச்சை கருவுடன் முட்டையிட்ட கோழி : விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு

மலப்புரம்,

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஒத்துக்குங்கல் நகரைச் சேர்ந்த ஏ.கே.ஷிஹாபுதீன். கோழிப்பண்னை நடத்தி வரும் இவர் சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு,  தனது கோழிப்பண்ணையில் ஓரு கோழி போட்ட முட்டையில் பச்சை மஞ்சள் கரு இருப்பதைக் கண்டறிந்தார். அது பாதுகாப்பானது தான என சந்தேகம் எழுந்ததால்  அவரோ அவரது குடும்பத்தினரோ அதை உட்கொண்டதில்லை.

அதற்கு பதிலாக, கோழியால் போடப்பட்ட சில முட்டைகளை குஞ்சிகள் பொறித்தார். சுவாரஸ்யமாக, அதில் இருந்து  உருவாகிய புதிய கோழிகளும் பச்சை முட்டையிட ஆரம்பித்தன. இது குறித்த படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். பச்சை மஞ்சள் கருக்கள் கொண்ட முட்டைகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிய பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் மக்கள் ஷிஹாபுதீனை தொடர்பு கொள்ளத் தொடங்கினர்.

சமீபத்தில், கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (கே.வி.ஏ.எஸ்.யூ) விஞ்ஞானிகள் சிறப்பு கோழிகள் மற்றும் முட்டைகள் குறித்து ஒரு ஆய்வைத் தொடங்கி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *