கொரோனா பாதிப்பு : மராட்டியத்தில் 44 ஆயிரத்தை கடந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 4வது முறையாக மே 31-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.  எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. நேற்று வரை மட்டும் மராட்டியத்தில்  மொத்தம், 41,642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர

இந்நிலையில் மராட்டியத்தில் மேலும் 2,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,642 லிருந்து 44,582 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியனவர்களின் எண்ணிக்கை 1454 லிருந்து 1517 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *