முக்கிய பிரதேசத்தில் கஞ்சாவுடன் போலீசில் சிக்கிய நபர்

இலங்கையில் வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தில் கஞ்சாவுடன் 55 வயதுடைய நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.வி.எம்.தாஹா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் வாழைச்சேனை நான்காம் வட்டாரத்தின் ஹைறாத் வீதியில் வைத்து 210 கிராம் கஞ்சாவுடன் 55 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *