முக்கிய வீதியில் நடைபெற்ற கோர விபத்தில் சிக்கி முதியவர் கவலைக்கிடம்

இலங்கையில் கிளிநொச்சி-பளை முல்லையடி பகுதியில் மூன்று சக்கர வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விபத்தில் மூன்று சக்கர வாகனத்தில் பயணித்த 72 மற்றும் 51 வயதுடையவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் காணப்படுகிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் சிக்கிய இருவரும் புதுக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் தொடக்கநிலை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர் .மேலும் விபத்திற்குள்ளான இருவரும் பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர்மட்ட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *