சமையல் எரிவாயு விலை தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. முன்னதாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிளம்பியிருந்தன.அதனையடுத்து பொது மக்களையிடையே குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை எந்தவொரு சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனமும் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை என்று நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *