இன்றும் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டதாக தகவல்

இலங்கையில் முல்லைத்தீவு – கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இன்றும் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட ஆறு கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு சற்று முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *